Tuesday, March 3, 2009

ஆட்டோ சாரதி மட்டக்களப்பில் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு நகருக்கு வெளியே இன்று நண்பகல் ஆட்டோ சாரதியொருவர் வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வாடகை நிமித்தம் சின்ன உப்போடைக்கு சென்று திரும்பும் வழியில் லூர்த் மாதா கோவிலுக்கு அருகாமையில் எதிர் கொண்ட துப்பாக்கிதாரிகளினால் இவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்அரசடியைச் சேர்ந்த செல்லத்துரை ரஞ்சித்குமார் (வயது 28 ) என அடையாளம் காணப்பட்டுள்ளர்.இக் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளிலேயே தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்

கருணா அம்மான் அவர்கள் நேற்று திருக்கோவில் பிரதேசத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பொதுச் சந்தைக் கட்டிடம் திறந்து வைத்தார்

பாராளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்கள் நேற்று திருக்கோவில் பிரதேசத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பொதுச் சந்தைக் கட்டிடம் திறந்து வைத்தார் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதியின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இப்பகுதி மக்கள் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களும் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உள்ளிட்ட பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நேற்று மாலை 4 மணியளவில் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் விரைவில் வேலையில்லாதோருக்கு வேலை பெற்றுக்கொடுப்பதாகவும் கருணா அம்மான் தெரிவித்தார்
மேலும் இன்று கல்முனை – பாண்டிருப்பு எல்லைவீதியிலுள்ள பிரதர் ஹவுசில் பொதுக்கூட்டமொன்றுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும்
இதில் பாராளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களும் கலந்து சிறப்பிப்பார்

முக்கிய செய்தி

லாகூர் விளையாட்டரங் கில் துப்பாக்கிப் பிரயோகம் இலங்கை வீரர்கள் 6 பேர் காயம் தகவல்கள் தெரிவிக்கின்றன

Monday, March 2, 2009

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கோப் சிற்றியை பாராளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) , வைபவ ரிதீயாக திறந்து வைத்தார்

பாராளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்கள் நேற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட கோப் சிற்றியை வைபவ ரிதீயாக திறந்து வைத்தார் இந் நிகழ்வில் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி, கிழக்கு மாகாண அமைச்சர்கள் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, துரையப்பா நவரட்ணராஜா மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் என பல கலந்து கொண்டனர்.

திடீர் வேட்டுச் சத்தம் கிழக்கு மாகாண அமைச்சர்கள் கலந்துகொண்ட வைபவத்தில்

மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று நண்பகல் கிழக்கு மாகாண அமைச்சர்கள் இருவர் கலந்து கொண்ட வைபவமொன்றின் போது அமைச்சர் ஒருவரின் மெய்க்காப்பாளருடைய துப்பாக்கி தற்செயலாக வெடித்ததாலேயே சில நிமிடங்கள் அங்கு பதற்றாமான நிலை காணப்பட்டது.மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா ஆகியோர் காத்தான்குடி கமநல சேவை நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. மெய்க்காப்பாளருடைய துப்பாக்கி உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டதோடு மேலதிக விசாரணைக்கு அவர் உட்படுத்தப்பட்டு வருவதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன

கருணா அம்மானின் தேனக கல்விப் பொறுப்பாளர் நியுட்டன் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச் சூடு.

கிழக்கின் தலைவர் கருணா அம்மானின் தேனக கல்விப் பொறுப்பாளர் நியூட்டன் சென்ற வாகனம் மீது இன்று துப்பாக்கிச் சூடு மட்டக்களப்பு ஊறணி சந்திக்கு அருகாமையில் வைத்து ஆயுததாரிகளால் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டது. இச்சம்பவத்தில் நியுட்டன் அவர்களுக்கருகில் இருந்து பயணம் செய்துகொண்டிருந்த ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளானார். காயங்களுக்குள்ளானவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

நேபாளத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயணமானார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்று நேபாளத்திற்குப் பயணமானார். அங்கு நேபாள ஜனாதிபதி ராம்பரன் யாதவ், பிரதமர் புஷ்பா கமல்டால், வெளிவிவகார அமைச்சர் உபேந்திரா யாதவ் ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்திய மத்திய அரசின் கூற்றுக்குத் தமிழ் நாட்டின் அழுத்தமே காரணம் அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை

விடுதலை புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்காவிட்டால் போர்நிறுத்தம் என்கின்ற பேச்சுக்கே இடமில்லை என்ற இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்" அவர் மேலும் கூறியதாவது தமிழ்நாட்டின் அழுத்தம் காரணமாக இந்திய மத்திய அரசாங்கம் ஒரு சில கூற்றுக்களை வெளியிட நேர்கின்றது. மேலும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச சமூகம் விடுதலை புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. ஆனால் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க தயாரில்லை என்பது புலப்படுகின்றது தற்போதைய இராணுவ நடவடிக்கைகளின் வேகம் சற்று தணிந்துள்ளது. காரணம் பொது மக்கள் மீதான அரசாங்கத்தின் அக்கறையாகும். அந்த மக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படவேண்டும் என்பதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும் இந்திய அரசாங்கம் ஊடாக முறையாக கிடைக்கப்பெறும் உதவிகளை நாம் பெற்றுக்கொள்வோம். அந்தவகையில் இந்தியாவின் மருத்துவ உதவியையும் வரவேற்கின்றோம். என்று அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா கூறினார்